SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று மார்கழி மாத பிறப்பு கோயில்களில் சிறப்பு பூஜை

2018-12-16@ 21:33:40

வேலூர்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். கிருஷ்ண பகவான் ‘மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கிறேன்’ என்று பகவத் கீதையில் அருளியுள்ளது சிறப்பாகும். இதனால் மார்கழி மாதத்தில் கோயில்கள், வீடுகளில் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி இன்று மார்கழி மாதம். இதையொட்டி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலையிலேயே பெண்கள் நீராடிவிட்டு தங்கள் வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு, மாட்டு சாணத்தில் விநாயகராக உருவகப்படுத்தி அதன்மீது பூசணி பூ வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். அரியூர் நாராயணிபீடம் பொற்கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையம், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோயில், விஷ்ணு துர்கையம்மன் கோயில், காட்பாடி கோபாலபுரம் வெங்கடாஜலபதி, பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர், குடியாத்தம் மீனூர் மலை,

திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள், ரங்கநாத பெருமாள், சேரி பரமபதநாதர், சோளிங்கர் யோகநரசிம்மர், சிங்கிரிகோயில் லட்சுமி நரசிம்மர், நரசிங்கபுரம் யோக நரசிம்மர், ஆற்காடு பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஒடுகத்தூர் அகரம் கஜேந்திர வரதராஜ பெருமாள், அணைக்கட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர், விரிஞ்சிபுரம், வாலாஜா, ஆற்காடு, திருப்பத்தூர் என்று மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள், அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பல பகுதிகளில் திருமணமாகாத பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தியபடி திருப்பாவை பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்று பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம்; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், துர்க்கையம்மன் கோயில், நட்சத்திர கோயில், காஞ்சி, கலசப்பாக்கம் உட்பட செய்யாற்றங்கரைகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலும், ஆரணி கோதண்டராமர், ஸ்ரீனிவாசபெருமாள், வரதராஜ பெருமாள், சத்தியமூர்த்தி சாலை கோதண்டராமர் கோயில்களிலும், கண்ணமங்கலம் பெருமாள் கோயில், பெரிய அய்யம்பாளையம் ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர், போளூர் சம்பத்கிரி நரசிம்மர், படவேடு வேணுகோபாலசுவாமி, கோதண்டராமர், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில், பட்சீஸ்வரர் கோயில், பாதாள விநாயகர் கோயில், பாலவிநாயகர் கோயில், முத்துமாரியம்மன், வந்தவாசி, தென்னாங்கூர் உள்ளிட்ட பல்வேறு வைணவ கோயில்களிலும் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்