SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7 மாதத்தில் 3.15 லட்சம் டன் ரப்பர் இறக்குமதி அதிகரிப்பு

2018-12-16@ 21:15:12

நாகர்கோவில்: தொடர் விலை சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் ரப்பர் இறக்குமதி கடந்த ஏழு மாதத்தில் 3.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ்.4 கிரேடு ரப்பர் கிலோ ரூ.176.82 என்று சராசரி விலை இருந்து வந்தது. தற்போது விவசாயிகளுக்கு ரூ.121 மட்டுமே கிடைக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி குறைந்து ரப்பர் இறக்குதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறக்குமதி என்பது உள்நாட்டு உற்பத்தியை கடந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 3.15 லட்சம் டன் ரப்பர் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் உள்நாட்டு .ற்பத்தி 3.44 லட்சம் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற ரப்பர் முழுவதும் விற்பனை செய்யப்படும் என்றாலும் தரமான ரப்பர் மட்டுமே சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இந்தியாவில் ரப்பர் சந்தையை ஆக்ரமிக்க தொடங்கியுள்ளது. வியட்னாம், சீனாவில் இருந்தும் ரப்பர் வரத்து தொடங்கியுள்ளது இந்திய ரப்பர் சந்தைக்கும், இங்குள்ள ரப்பர் விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் மொத்த ரப்பர் உற்பத்தி கடந்த நிதியாண்டில் 6.97 லட்சம் டன் என்று குறைந்தது. இதில் கேரளா தவிர தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பங்களிப்பு மட்டும் 1.50 லட்சம் டன் ஆகும். ஐந்தாண்டு முன்பு வரை நாட்டில் மொத்த ரப்பர் உற்பத்தியில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை மட்டுமே கேரளா தவிர பிற மாநிலங்களின் பங்களிப்பு இருந்த நிலையில் தற்போது இந்த ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இறக்குமதி ரப்பருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சென்னை, மும்பை உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக வருகின்ற காய்ந்த ரப்பருக்கு இறக்குமதி வரி கிலோவுக்கு ரூ.30 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவது இல்லை. உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்