SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி வரதமாநதி அணையை பார்வையிட தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

2018-12-16@ 20:39:52

பழநி: பழநி வரதமா நதி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி-கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் அருகே வரதமாநதி அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 66 அடியாகும். தற்போது அணையில் 61.02 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 100 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 150 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இயற்கை எழில்சூழ்ந்த மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த அணையை பார்க்க சுற்றுலா பயணிகளும், ஐயப்ப சீசன் காலத்தில் ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில் இந்த அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அணையின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள 2 கதவுகளும் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அணையை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி இங்கு தள்ளுவண்டி கடைகளை வைத்து, பழங்கள் மற்றும் திண்பண்டங்களை விற்கும் சிறுவியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அணையை பார்க்க வருபவர்கள் பிளாஸ்டி குப்பைகளை அணைப்பகுதியில் போட்டு விட்டு செல்கின்றனர். மேலும் தடையை மீறி அணைப்பகுதியில் ஆபத்தான முறையில் இறங்கி குளிக்க முயல்கின்றனர்.

சமீப காலமாக அணையில் மூழ்கி சுற்றுலா பயணிகள் இறந்து வருகின்றனர். எனவே அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் விரைவில் அணையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தபின்னர், சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்