SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்கழி மாத பிறப்பையொட்டி நெல்லையில் சிறுவர்கள் பஜனை ஊர்வலம்

2018-12-16@ 20:23:25

நெல்லை: மார்கழி மாத பிறப்பையொட்டி நெல்லையில் சிறுவர்கள் பங்கேற்ற பஜனை ஊர்வலம் நடந்தது. இதில் திரளான சிறுவர்கள் கலந்துகொண்டு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களை பாடி வீதிவலம் வந்தனர்.தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனி சிறப்பு உள்ளது. அத்தகைய சிறப்பான மாதங்களில் மார்கழி மாதமும் ஒன்று. மார்கழி மாதம் பிறப்பையொட்டி இன்று அதிகாலையில் பெண்கள் எழுந்து நீராடி வீட்டின் முன் மாவினால் கோலமிட்டு அருகில் உள்ள பெருமாள் மற்றும் சிவன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர்.

இதுபோல் வீடுகளில் உள்ள சிறுவர்கள், முதியவர்களும் அதிகாலையில் எழுந்து நீராடி மார்கழி மாத பஜனையில் ஈடுபட்டனர். இதில் பஜனை குழுவினர் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி வீதிவலம் வந்தனர். பெருமாள் மற்றும் சிவன் கோயில்களில் வழிபட்டனர். இதில் நெல்லை மேலநத்தம் பகுதியில் ராதை கிருஷ்ணா பஜனை குழுவினரும், நெல்லை டவுன் தொண்டர் நயினார் கோயில் திருபுகழ் பஜனை குழுவினரும், டவுண் செண்பகம்பிள்ளை தெரு பஜனை குழுவினரும் பஜனை பாடல்களை பாடி வீதிவலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள், சிறுவர்கள் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்