SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்துணர்வு முகாமில் யானைகள் கோயில் விழாவில் பங்கேற்க முடியலை: பாகன்கள் வருத்தம்

2018-12-16@ 19:41:49

கோவை: கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் நேற்று முன் தினம் துவங்ய  யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழகம் முழுவதிலும் உள்ள 27 ேகாயில் யானைகள் பங்கேற்றுள்ளன. தொடர்ந்து 48 நாள் நடக்கும் இந்த நலவாழ்வு முகாம் ஜனவரி 30ம் தேதி நிறைவடைகிறது.
 முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு முதற்கட்டமாக வனத்துறை மருத்துவர்களை கொண்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. வனத்துறை மருத்துவர் திருக்குமரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று காலையில் யானைகளை பரிசோதனை செய்தனர். அப்போது, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் யானை ஆண்டாள், சங்கரன்கோயில் சங்கர நாராயணசுவாமி கோயில் யானை கோமதி ஆகிய இரண்டு யானைகளுக்கும் இடுப்பு பகுதியில் சிறிய காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து முகாமில் பங்கேற்றுள்ள 27 யானைகளுக்கும் ஹெல்த் கார்டு அளிக்கப்பட்டது. இதில், யானையின் பெயர், வயது, தடுப்பூசி போடப்பட்ட காலம் உள்ளிட்டவை குறித்த முழு தகவல்களும் இடம்பெற்றுள்ளது.பெருமாள் கோயில்களில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடக்கும் 20 நாள் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் முக்கியமானது. இதில், கடந்த 8ம் தேதி முதல் 17ம் தேதி (நாளை) வரை பகல்பத்து என்படும் திருமொழித்திருநாள் நடக்கிறது. இதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி, வரும் 18ம் தேதி பெருமாள் கோயில்களில் நடக்கிறது.

தற்போது நடந்து வரும் யானைகள் நலவாழ்வு முகாமில், ஸ்ரீபெரும்புதூர் கோதை, பூமா, செங்கமலம், ஆண்டாள், சுந்தரவள்ளி தாயார், ஜெயமால்யதா, கோமதி, ஆதிநாயகி, குமுதவள்ளி, சுந்தரவள்ளி உள்ளிட்ட 10 யானைகள் பங்கேற்றுள்ளது. இதனால், பெருமாள் கோயிலின் முக்கிய நிகழ்வுகளில் கோயில் யானைகள் பங்கேற்க முடியவில்லை என பாகன்கள் வருத்தம் தெரிவித்தனர். கோயில் விஷேச தினங்களில் முகாம் நடத்துவதற்கு பதிலாக முன்கூட்டியே நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்