SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் தலைவராக பதவியேற்று ஒராண்டு நிறைவு: தலைவர்களுக்கு ராகுல்காந்தி நன்றி

2018-12-16@ 19:13:17

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பதவி ஏற்ற ஒராண்டு நிறைவடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சியின் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமாக சோனியா காந்தி உடல்நிலை காரணமாக தனது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விளகினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் 16-12-017 இன்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி ஏற்று கொண்டார். ராகுல் காந்தி பதவியேற்றப்பின்
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் சூறாவளியாக சுழன்று பிரசாரம் மேற்கொண்ட அவர், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றியை தேடி தந்தார். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவரது பணிக்கும் 3 மாநில தேர்தல் வெற்றிக்கும் ஏராளமானவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக ஓராண்டை நிறைவு செய்யும் இந்நாளில், நமது கட்சியை வலிமையாகவும், ஒற்றுமையாகவும், வீரியம் மிக்கதாகவும் மாற்ற மீண்டும் உறுதி ஏற்கிறேன் என்றார். எனக்கு இன்று வாழ்த்து தெரிவித்து வந்துகொண்டிருக்கும் வாழ்த்து செய்திகளை கண்டு பிரமிப்பு அடைகிறேன். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும், உங்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்