SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி

2018-12-16@ 17:22:10

சென்னை: திமுக தலைவர் கலைஞர் திருவுருவச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்துள்ளார். திமுக தலைவர் கலைஞர் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார்.  அவரது உடல், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கிய முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் கலைஞரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே கலைஞருக்கு சிலை வைக்க முடிவு  செய்யப்பட்டு, சிலை தயாரிக்கப்பட்டது. கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.  

விழாவில் கலந்து கொள்வதற்காக சேனியா காந்தி உள்ளிட்ட தேசிய  தலைவர்கள் இன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைத்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்தி உள்ளிட்ட திரைத்துறையினர் விழாவில் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் அன்பழகன் நன்றி தெரிவித்தார்.

கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெறுவதையொட்டி சோனியாகாந்தி, ராகுல் மற்றும் அண்டை மாநில முதல்வர்கள் சென்னை வந்துள்ளனர். இதனையடுத்து கருணாநிதி சிலை திறக்கப்படும் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டையில் பொதுக் கூட்ட வளாகம், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்