SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரபேல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை குறை காணும் அளவுக்கு காங்கிரஸ் உள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

2018-12-16@ 16:49:05

லக்னோ: ரேபரேலியின் வளர்ச்சிக்காக முந்தைய காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி நகருக்கு பிரதமர் மோடி இன்று வந்தார். அவருக்கு உத்திரபிரதேச ஆளுநர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர் ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைத்ததுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் ரேபரேலியில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட 900-வது ‘ஹம்சபர்’ ரெயில் பெட்டியை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

பின்னர், ரெயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக மத்திய அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசார் நமது நாட்டு ராணுவ அமைச்சர் சொல்வதை நம்பவில்லை என்றும் விமானப்படை உயரதிகாரிகள் கூறியதை நம்பவில்லை என்றும் அவர்களை எல்லாம் பொய்யர்கள் என்று புறக்கணித்து விட்டார்கள் என்றார். பிறகு, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சொன்னதையும் நம்பவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தை கூட குறை காணும் அளவுக்கு அவர்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் மெத்தனப்போக்கான அணுகுமுறையை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது என்றும் கார்கில் போருக்கு பின்னர் நமது விமானப்படையை அதிநவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதற்காக ஒன்றுமே செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கிய போதெல்லாம் வெளிநாட்டு இடைத்தரகர்கள் நுழைக்கப்பட்டனர் என்றும் அவர்கள் வெளிநாட்டு தாய்மாமாக்களுடன் மட்டுமே ஆயுத வியாபாரம் செய்தனர். இப்போது காங்கிரசாருக்கு ஒரு புது தாய்மாமா கிடைத்திருக்கிறார் என்று கூறினார்.

அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டியன் மைக்கேலை நாங்கள் துபாயில் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்தோம். ஆனால், அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக அவசர அவசரமாக காங்கிரஸ் கட்சி தங்களது வழக்கறிஞறை ஏற்பாடு செய்து தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இன்று பிற்பகல் ரேபரேலியில் இருந்து பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்கு சென்று கும்பமேளா விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடும் பிரதமர் மோடி, இங்கு சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், ஜுன்சி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneer_laari_kudam11

  குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

 • kali_dogsa1

  கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

 • firoilsuthigari11

  அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

 • 24-06-2019

  24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-06-2019

  23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்