SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி கோயில் மலைப்பாதையில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு அனுமதி

2018-12-16@ 14:42:59

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மலைப்பாதையில் ஹெல்மெட் இல்லாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அனுமதி இல்லை என்று விஜிலன்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் பஸ், ரயில், கார் போன்ற வாகனங்களில் வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் பைக்குகளில் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு வருகின்றனர்.

அவ்வாறு ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பைக்கில் வரும் பக்தர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இவை இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் அலிபிரியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்