SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெய்ட்டி புயல் காரணமாக 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்..... மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

2018-12-16@ 13:35:10

சென்னை: பெய்ட்டி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், வங்க கடலில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல் சென்னையில் இருந்து 430 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிச.,17 பிற்பகலில் ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே கரையை கடக்கும். இதனால் தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் இன்றும்  நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். பெய்ட்டி புயல் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிடப்படும் அளவில் மழைப்பொழிவு இல்லை என்றார். இப்புயலுக்கு, பெய்ட்டி என தாய்லாந்து நாடு பெயர் சூட்டியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்