SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற குழுவிடம் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை

2018-12-16@ 01:40:21

புதுடெல்லி: ‘‘ரபேல் விமானத்தின் விலை பற்றிய அறிக்கை சிஏஜிக்கு அனுப்பப்பட்டு நாடாளுமன்ற கணக்கு குழுவால் ஆய்வு செய்யப்பட்டதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது பொய் தகவல்’’ என நாடாளுமன்ற கணக்கு குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில்  தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதில், விமான விலை விவரங்கள் கணக்கு தணிக்கை அமைப்பிடம் (சிஏஜி) தெரிவிக்கப்பட்டது என்றும், அதை நாடாளுமன்ற கணக்கு குழு (பிஏசி) ஆய்வு செய்துள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாடாளுமன்ற கணக்கு குழு தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான  மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘சிஏஜி அறிக்கை பற்றி தவறான தகவல் அளித்து உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழி நடத்தியுள்ளது.
அட்டர்னி ஜெனரலையும், சிஏஜியையும் அழைத்து, ரபேல் விமான விலை தொடர்பான சிஏஜி அறிக்கை எப்போது நாடாளுமன்ற கணக்கு குழுவில் தாக்கல் செய்யப்பட்டு ஆலோசிக்கப்பட்டது என நாங்கள் கேட்போம். இதுவரை விமான விலை பற்றி சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இது அதிர்ச்சி அளிக்கிறது. இதுற்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

கங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரபேல் விமானத்தின் விலை பற்றி சிஏஜி அறிக்கையை பெறவில்லை என பிஏசி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகிறார். இந்த தவறுக்கு யார் காரணம்? இந்த பதிலை அரசுதான் தெரிவித்துள்ளது. இதை அட்டர்னி ஜெனரல் எப்படி தெரிவித்தார்? இதன் மூலம், அரசே தனது அறிக்கையை படிக்கவில்லை எனத் தெரிகிறது. விமானத்தின் விலை விவரம், தொழில்நுட்ப விவரங்களுக்குள் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. எனவே, நாடாளுமன்ற கூட்டுக்குழுதான் (ஜேபிசி) இந்த ஒப்பந்தத்தை விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

தீர்ப்பில் திருத்தம் : மத்திய அரசு மனு

ரபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், சிஏஜி மற்றும் நாடாளுமன்ற கணக்கு குழு பற்றி தெரிவிக்கப்பட்ட விவரத்தில் திருத்தம் கோரி மத்திய அரசு மனு செய்துள்ளது. இது குறித்து சட்ட அதிகாரி கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி மற்றும் பிஏசி ஆவணங்களில் மாறுபட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை திருத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்