SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலையைவிட்டு நிறுத்தியதில் முன்விரோதம் : வேன் உரிமையாளருக்கு கத்திக்குத்து

2018-12-16@ 01:27:01

தாம்பரம்: தாம்பரம் பெரியார்நகர் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (36). இவர் 4 மினி வேன் வைத்திருந்தார். குமாரிடம், 2 மாதங்களுக்கு முன்பு மினி வேனை ஓட்டுவதற்காக, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் செல்லதுரை (29) வேலைக்கு சேர்ந்துள்ளார். ஒரு வாரத்தில் அவரது நடவடிக்கை பிடிக்காததால் வேலைக்கு வர வேண்டாம் என குமார் கூறினார். இதனால் வாக்குவாதம் முற்றியதால் குமார் உட்பட 5 பேர் சேர்ந்து செல்லதுரையை அடித்துள்ளனர். உடனே செல்லத்துரை வேன் கண்ணாடியை உடைத்துள்ளார்.

சிட்லப்பாக்கம் போலீசில் குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் குமார் மீது, அடிதடி வழக்குப்பதிவு செய்தனர். வேன் கண்ணாடியை உடைத்ததற்காக செல்லதுரையிடம் பணம் பெற்று வழங்கினர். நேற்று முன்தினம் குமார் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த செல்லதுரை கத்தியால் குமாரை குத்திவிட்டு தப்பினார். குமாரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.

 பள்ளிக்கரணை போலீசார் நேற்று முன்தினம் இரவு பெல்நகரில் ரோந்து பணியில் இருந்தனர். சந்தேகத்துக்கு இடமாக பைக்கில் வந்த 2 பேரை விசாரித்தபோது பள்ளிக்கரணையை சேர்ந்த உதயகுமார் (21), பிரபு (24) என்பதும், செல்போன் பறித்து வந்ததும் தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து 3 செல்போனை பறிமுதல் செய்தனர்.

 பெரும்பாக்கம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பு. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காமாட்சி (26). திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. 2 வயதில் மகன் உள்ளான். 3 மாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சிக்கு நேற்று முன்தினம் வயிற்றுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே காமாட்சி இறந்துது தெரிந்தது.
 மேற்கு தாம்பரம், திருவள்ளுவர்புரம், முதல் தெருவை சேர்ந்தவர் முரளி (45).  பையிண்டர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதி கிணற்று சுவர் மீது அமர்ந்து மது அருந்தினார். போதை அதிகமானதும் கிணற்றுக்குள் விழுந்தார். தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் வந்து கிணற்றில் இறங்கி அவரை மீட்டபோது இறந்தது தெரியவந்தது. தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

  திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் பகுதி கடலில் நேற்று 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. திருவொற்றியூர் போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

  பம்மல் மூங்கில் ஏரி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (32), சங்கர் (36) மற்றும் பாரதி (33). 3 பேரும் சகோதரர்கள். சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பம்மல் மார்க்கெட் அருகே 4 வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றனர்.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 4 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார்த்திக்கிடம் நாகர்கோவிலை சேர்ந்த காமராஜ் (41)  என்ற டிரைவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவரை வேலையை விட்டு நீக்கியதால் ரஞ்சித்குமார் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேருடன் சேர்ந்து, வாகனங்களை கொளுத்தியது தெரிந்தது. 3 பேரையும் கைது செய்தனர்.

 ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி நேற்று மகாலட்சுமி நகரில் சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரித்தபோது ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு தெருவை கிராமத்தை சேர்ந்த ஹரீஷ் (40) என்பதும் வீடுகளில் திருடியதும் தெரிந்தது. எனவே அவரை கைது செய்தனர்.

 ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் தினேஷ், கக்கன்நகர் பகுதியில் நின்றவரை விசாரித்தபோது நீலாங்கரையை சேர்ந்த பிரகாஷ், (30) என்பதும், கடையை உடைத்து திருடியது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
 
 வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. தாங்கல் தெருவில் இருந்து எல்லையம்மன் கோயில் தெருவுக்கு செல்ல தனியார் பள்ளி வேன் நேற்று மதியம் புறப்பட்டது. அதில், 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர்.

தாங்கல் தெரு சென்றுபோது தடுப்புக்காக வைக்கப்பட்ட இரும்பு தகடு திடீரென சாய்ந்து வேன் மீது விழுந்தது. இதில் வேனின் முன்பக்கம் கண்ணாடி உடைந்தது. உடனே பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

 தரமணி போலீசார் நேற்று ரோந்து பணியில் இருந்தபோது 3 பேருடன் வந்த ஆட்டோவை மடக்கினர். விசாரணையில் ஓட்டேரியை சேர்ந்த முருகன் (36), ரமேஷ் (32), வியாசர்பாடி வினோத்குமார் (32) என்பதும், பூட்டிய வீடுகளில் திருடியதும் தெரிந்தது. எனவே 3 பேரையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

 காசிமேடு அமரஞ்சிபுரத்தை சேர்ந்த ஜோஸ்வா ஜஸ்டின் (21) நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்து சென்றபோது 8 பேர் தாக்கி செல்போன், ₹3 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரிக்கின்றனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியிலிருந்தனர். பைக்கில் சென்றவரை மடக்கி விசாரித்தபோது திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவை சார்ந்த அறிவழகன் (29) என்பதும், திருட்டு மற்றும் தனியாக வசிக்கும் பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து 25 சவரன் நகை, பைக்கை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

 • turkeycamelfight

  2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்