SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி ஆவணங்கள் தயாரித்து சொத்து அபகரிப்பு : 3 பேர் கைது

2018-12-16@ 01:25:02

சென்னை: சென்னை குரோம்பேட்டை லஷ்மிபுரம் ஜெயராமன் தெருவில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:சென்னை ராயலா நகர், ராமாபுரத்தில் எனக்கு சொந்தமான 2640 சதுரடி கொண்ட ₹1.5 கோடி மதிப்பு காலி மனையை ஆள்மாறாட்டம் மற்றும் போலியான ஆவணம் தயார் செய்து அபகரித்துள்ளனர். எனவே எனது சொத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.நகர், ஹபிபுல்லா ரோடு பிரேமா இல்லம் 3வது தெருவில் வசித்த வந்த மதுரையை சேர்ந்த திரவிய பாண்டியன் (52), கொளப்பாக்கம், மகாலட்சுமி நகர், அபிநயா கார்டன் பகுதியை சேர்ந்த  அனில்குமார் (46) மற்றும் ராமாபுரம், கண்ணம்மாள் நகரை சேர்ந்த ராஜா (47) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹1.50 கோடி மதிப்புள்ள காலி மனை மீட்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்