SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டீஸ்கர் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி : ராகுல் தீவிர ஆலோசனை

2018-12-16@ 01:22:19

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் முதல்வர்களை தேர்வு செய்தபின், சட்டீஸ்கர் முதல்வர் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இப்பதவிக்கு 4 பேர் போட்டியில் உள்ளனர். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ், முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் அக்கட்சி  வெற்றி பெற்றுள்ளதால் இங்கு முதல்வரை தேர்வு செய்வது காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பெரும் சிக்கலாக அமைந்து விட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் பதவிக்கு கமல்நாத்தும், ஜோதிராதித்யா சிந்தியாவும் போட்டி போட்டனர். ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி நிலவியது. சட்டீஸ்கர் முதல்வர் பதவிக்கு அங்குள்ள முன்னணி எம்.எல்.ஏ.க்கள் சிங் தியோ, தம்ராத்வாஜ் சாகு, பூபேஸ் பாகல், சரண்தாஸ் மகந்த் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது..

இதனால், 3 மாநில காங்கிரஸ் தொண்டர்களிடம் டிஜிட்டல் முறையில் ராகுல் கருத்து கேட்டார். ஒவ்வொரு மாநிலமாக முதல்வரை தேர்வு செய்யும் ஆலோசனையை தொடங்கினார். இந்த ஆலோசனை டெல்லி துக்ளக் தெருவில் உள்ள ராகுல் வீட்டில் சோனியா, பிரியங்கா முன்னிலையில் நடந்தது. இதில், மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் கடந்த 13ம் தேதி அறிவிக்கப்பட்டார். ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள 4 போட்டியாளர்களிடமும் ராகுல் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போதும் ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தியும், பிரியங்காங்கவும் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்