SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஞ்சி கோப்பை: பஞ்சாப் அபாரம் ....சுப்மன் கில் 199*

2018-12-16@ 01:15:12

சண்டிகர்,: ரஞ்சி கோப்பையில் தமிழகத்துக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. சுப்மன் கில் 199 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.சண்டிகரில் நடக்கும் இப்போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 215 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 2ம் நாளான நேற்று பஞ்சாப் அணி பேட் செய்தது. துவக்க வீரர் ஜிவன்ஜோத் 33, அன்மோல் பிரீத் 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில், தமிழக பந்துவீச்சை சிதறடித்தார்.

ஒருநாள் போட்டி போல ரன் சேர்த்த அவர் எளிதாக சதம் அடித்து இரட்டை சதத்தை நெருங்கி உள்ளார். மறுமுனையில் கேப்டன் மன்தீப் சிங் அரைசதம் அடிக்க, ஆட்ட நேர முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது.சுப்மன் கில் 199, மன்தீப் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்