SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் டெஸ்ட் போட்டியில் சவுத்தீ வேகத்தில் பணிந்தது இலங்கை

2018-12-16@ 01:13:02

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சவுத்தீ 5 விக்கெட் வீழ்த்தி இலங்கையின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்தின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமாளித்து, இலங்கை அணியின் கருணாரத்னே, மேத்யூஸ், டிக்வெல்லா சிறப்பாக பேட் செய்து அரைசதம் அடித்தனர். அதே நேரத்தில் நியூசிலாந்தின் சவுத்தீ சீரான இடைவெளியில் இலங்கையின் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.

இவர், குணதிலகா (1), டிசில்வா (1), மெண்டிஸ் (2), மேத்யூஸ் (83), சண்டிமால் (6) ஆகிய 5 பேரையும் வெளியேற்றி இலங்கையை கட்டுப்படுத்தினார். கருணாரத்னே 79 ரன் எடுத்து வாக்னர் பந்தில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் இலங்கை 87 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களுடன் உள்ளது. டிக்வெல்லா 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சவுத்தீ 5, வாக்னர் 2, கிராண்டோம்மி, போல்ட் தலா 1 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்