SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபா பேரவையில் இருந்து வந்தவருக்கு பதவியா? அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கைகலப்பு: உடன்குடியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பரபரப்பு

2018-12-16@ 00:36:31

உடன்குடி: உடன்குடியில் அமைச்சர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட  இலக்கியஅணி துணை செயலாளர்  பொன்ராம் பேசும்போது, தீபா பேரவையில் இருந்து வந்தவருக்கு நகர செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் மற்றொருவர் அமமுகவிலும் பொறுப்பில் இருக்கிறார்.  இதுகுறித்து மாவட்ட செயலாளர், அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.

அப்போதுஒரு தரப்பினர் பொன்ராமுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்களிடையே வாய்த் தகராறு முற்றவே, கைகலப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட  செயலாளர், மைக்கை வாங்கி பேசும்போது, ெலட்சுமிபுரம் ஊராட்சி செயலாளர் மகேந்திரன், அமைச்சரிடம் பேசினார். அவரை மேடையின் பின்புறம் நின்றிருந்த தொண்டர், மேடையில் இருந்து தள்ளிவிடவே மீண்டும் சலசலப்பு  ஏற்பட்டு கைகலப்பு, தள்ளுமுள்ளு உருவானது. இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, குற்றச்சாட்டுகளை தனியாக வந்து பேசுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இதனால் ஒரு தரப்பினர், மண்டபத்தை விட்டு வெளியேறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்