SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிரா கவர்னருடன் வைகோ சந்திப்பு

2018-12-16@ 00:35:49

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று திடீரென சந்தித்து பேசினார். மும்பையில் நானி பல்கிவாலா நினைவு அறக்கட்டளை சார்பில் மனித உரிமைப் போராளிகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நரிமன் முனையில் உள்ள அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவில் அனைத்து  இந்திய அளவிலான இந்த விருது மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னதாக   வைகோ மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்னர் வித்யாசாகர் ராவை திடீரென சந்தித்து பேசினார். சுமார் 1 மணி ேநரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, கவர்னர் வித்யாசாகர் ராவ் வைகோவிடம் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது  வைகோவிற்கு ஆளுநர் காலை விருந்து அளித்தார் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்