SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : மனநலம் பாதித்த பெண் தந்த தவறான தகவலால் பரபரப்பு

2018-12-15@ 17:20:25

மும்பை : இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பெண் பயணி ஒருவர் கூறியதால் மும்பை விமான நிலையத்தில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை 6.05 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படவிருந்தது. அப்போது கோஏர் விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணி ஒருவர் விமான நிலைய அலுவலகத்திற்கு சென்று மும்பையில் இருந்து லக்னோ வழியாக டெல்லி செல்லும் 6இ3612 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறியதுடன் சிலரது புகைப்படங்களையும் காட்டி அவர்கள் தான் குண்டு வைத்ததாகவும் கூறினார்.

அதை தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்றும் பறப்பதற்கு பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்ட பின் சுமார் 2.5 மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இதனிடையே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதை அடுத்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்