SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போராட்டம் ஓய்ந்ததால் சபரிமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்...... ஒரே நாளில் 67 ஆயிரம் பேர் தரிசனம்

2018-12-15@ 14:54:16

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால் கோவில் நடை திறந்தபோது பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் சபரிமலை செல்ல தயங்கினர்.

இந்நிலையில் சபரிமலையில் நடந்த போராட்டங்கள் அண்மையில் விலக்கிக்கொள்ளப்பட்டது. போலீசாரின் கெடுபிடிகளும் குறைந்தன. மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஐகோர்ட் நியமித்த குழு ஆய்வு செய்து திருப்தி தெரிவித்தது. இதையடுத்து சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிய தொடங்கினர்.

நடைதிறந்து 2 வாரங்களுக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறந்த பின்பு நேற்று தான் மிக அதிகளவில் பக்தர்கள் வந்துள்ளனர். இதனை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகளவில் பத்தர்கள் குவிந்ததால் சன்னிதானத்தில் 18-ம் படி ஏற 3 மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்