SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ,விளம்பரத்திற்காக மட்டும் ரூ.6,016 கோடி செலவு

2018-12-15@ 12:38:49

டெல்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் மற்றும் விளம்பரத்திற்காக மட்டும் மத்திய அரசு ரூ.6,016 கோடி செலவு செய்து இருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் மற்றும் விளம்பர செலவு பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளனர். அதில் கடந்த 4.5 ஆண்டுகளில் 84 முறை மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,013.76 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார்.

இதில் பிரதமர் மோடிக்கான தனி விமான பராமரிப்பு, பிரத்யேக தொலைத் தொடர்பு இணைப்பு உருவாக்கம் போன்ற செலவுகளும் அடக்கம். இதே போல் பிரதமரின் திட்டங்களை   விளம்பரப்படுத்துவதற்காக ரூ.4,602.88 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மற்றொரு மத்திய அமைச்சர் ராஜவர்தன ராத்தூர் கூறியுள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணம் மற்றும் விளம்பரத்திற்காக மட்டும் மத்திய அரசு ரூ.6,016 கோடி செலவு செய்து இருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பிரதமர் மோடிக்கு விளம்பரம் தேட மக்களின் வரி பணத்தை வீணடிப்பதா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்