SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சராக ஜோரம்தாங்கா இன்று பதவியேற்பு

2018-12-15@ 10:42:49

அய்சால்: மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்கிறார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் TRS கட்சியும், மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகித்தன. இதனையடுத்து மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

ஆளுநர் மாளிகையில் பகல் 12 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜசேகரன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்தவரான ஜோரம்தாங்கா காங்கிரஸ் அரசை அகற்றி பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்