SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் பஞ்சாப் அணியிடம் தமிழகம் திணறல்

2018-12-15@ 03:24:34

சண்டிகர்: பஞ்சாப் அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்துள்ளது. மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. மன்பிரீத் கோனி, பல்தேஜ் சிங், சந்தீப் ஷர்மா ஆகியோரின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய தமிழக அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஜெகதீசன் 19, அபினவ் முகுந்த் 5 ரன்னில் வெளியேற, கேப்டன் இந்திரஜித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஓரளவு தாக்குப்பிடித்த தினேஷ் கார்த்திக் 26 ரன், அபராஜித் 40 ரன் (115 பந்து, 6 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய விஜய் ஷங்கர் அரை சதம் அடித்தார்.

ஷாருக் கான் 19 ரன், விஜய் ஷங்கர் 71 ரன் (122 பந்து, 7 பவுண்டரி), முகமது 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்துள்ளது (84 ஓவர்).
விக்னேஷ், நடராஜன் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். பஞ்சாப் பந்துவீச்சில் மன்பிரீத் கோனி 18 ஓவரில் 5 மெய்டன் உட்பட 55 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். பல்தேஜ் சிங் 3, சந்தீப் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

சித்தேஷ், ஷ்ரேயாஸ் அதிரடி
வாங்கடே மைதானத்தில் பரோடா அணியுடன் நடைபெறும் ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 439 ரன் குவித்துள்ளது (85.5 ஓவர்). கேப்டன் சித்தேஷ் லாட் 130 ரன் (173 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் அய்யர் 178 ரன் (139 பந்து, 17 பவுண்டரி,  11 சிக்சர்) விளாசினர். சித்தேஷ் - ஷ்ரேயாஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 283 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஷுபம் ரஞ்சனே 42, துபே 37 ரன் எடுத்தனர். ஆகாஷ் பார்கர் 9 ரன்னுடன் களத்தில் உள்ளார். பரோடா பந்துவீச்சில் பார்கவ் பட் 4, ஹர்திக் பாண்டியா 3, யூசுப் பதான் 1 விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் 135 ஆல் அவுட்
ஒடிஷா அணிக்கு எதிராக புவனேஸ்வரில் நேற்று தொடங்கிய சி பிரிவு லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் லோம்ரர் 85 ரன் (105 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச, சாஹர் 18, மெனரியா 10 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். ஒடிஷா பந்துவீச்சில் பசந்த் மொஹாந்தி 6 விக்கெட் (15-6-20-6), ராஜேஷ் மொஹாந்தி 3, சூரியகாந்த் பிரதான் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஒடிஷா அணி, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்துள்ளது. சமாந்த்ரே 30, அபிஷேக் ராவுத் 22 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

 • airshow

  பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்