SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3வது ஒருநாள் போட்டியில் அசத்தல் தொடரை வென்றது வங்கதேசம்

2018-12-15@ 03:23:21

சில்ஹெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 108 ரன் (131 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். சாமுவேல்ஸ் 19, கீமோ பால் 12, டேரன் பிராவோ 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். வங்கதேச பந்துவீச்சில் மெகதி ஹசன் மிராஸ் 4, ஷாகிப் ஹசன், மோர்டசா தலா 2, சைபுதீன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 38.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து எளிதாக வென்றது. லிட்டன் தாஸ் 23, சவும்யா சர்க்கார் 80 ரன் (81 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். தமிம் இக்பால் 81 ரன் (104 பந்து, 9 பவுண்டரி), முஷ்பிகுர் ரகிம் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த அணியின் மிராஸ் ஆட்ட நாயகன் விருதும், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்