SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெர்த் டெஸ்ட் : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6/277

2018-12-14@ 16:44:13

பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அடிலெய்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட  நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 277 ரன்களை எடுத்தது.


துவக்க வீரர்களாக களமிறங்கிய பிஞ்ச் மற்றும் ஹாரிஸ் ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். ஹாரிஸ் 141 பந்துகளில் 70 ரன்களையும், பிஞ்ச் 105 பந்துகளில் 70 ரன்களையும் எடுத்தனர். மேலும் ஷான் மார்ஷ் 45 ரன்களையும் , ஹெட் 58 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் ஷர்மா மற்றும் விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் தல 1விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.


கேப்டன் டிம் பெயின் 16ரன்களிலும் , சும்மின்ஸ் 11 ரன்களிலும் காலத்தில் உள்ளனர். இரண்டாவது நாள் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியா அணியை 300 ரன்களுக்குள் சுருட்டினால் இந்திய அணி முதல் இன்னிஸிங்ஸில் சிறப்பாக ஆடினால் முன்னிலை பெற முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்