SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தவறான கருத்துக்களை கூறிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் : அமித்ஷா

2018-12-14@ 16:40:19

புதுடெல்லி : ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது என்றும், அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் மத்திய அரசுக்கு எதிராக பரப்பப்பட்ட தவறான பிரச்சாரத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ரஃபேல் ஒப்பந்தம் இரண்டு அரசாங்கள் இடையே மேற்கொள்ளப்பட்டது, துரதிருஷ்டவசமாக மிகப்பழமையான கட்சியால் நாட்டு மக்கள் திசை திருப்பப்பட்டனர் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். பேர விவகாரங்களை வெளியிள் சொன்னதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு காங்கிரஸ் கூறு விளைவித்தது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அளித்தது யார் எனவும் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்