SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் விஜய் மல்லையா திருடன் இல்லை : நிதின் கட்கரி

2018-12-14@ 12:29:16

புதுடெல்லி : ஒரு முறை கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் விஜய் மல்லையாவை திருடன் என நினைக்கும் மனப்பான்மை நியாயமற்றது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், விஜய் மல்லையா கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றார். விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் விஜய் மல்லையா நாடு திரும்பவில்லை.

இதையடுத்து மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவருடைய சொத்துகளை முடக்கியது. மேலும் அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தனர். விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனிடையே லண்டன் போலீசாரால் விஜய் மல்லையா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார். இதனை தொடர்ந்து தற்போது விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கில், வங்கி மோசடி வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில் ஒரு முறை கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் விஜய் மல்லையாவை திருடன் என நினைக்கும் மனப்பான்மை நியாயமற்றது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 40 வருடங்களாக மல்லையா தனது நிலுவை தொகையை தொடர்ந்து செலுத்தி வந்தார் எனவும், இருப்பினும் வங்கி மோசடி, பண மோசடி காரணமாக விஜய் மல்லையாவுடன் எந்த வியாபாரமும் வைத்துக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படத்தான் செய்யும், ஒருவர் கீழே விழும்பும்போது மற்றவர்கள் அவருக்கு உதவ வேண்டும், ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்