SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்தியபிரதேச முதல்வராக கமல்நாத் 17-ம் தேதி பதவியேற்பு... ராஜஸ்தானில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே போட்டி

2018-12-14@ 11:48:08

போபால்: மத்தியபிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் வரும் திங்கள் கிழமை பதவியேற்கிறார். மத்தியபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. இதற்காக போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை கமல்நாத் இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அதன் தொடர்ச்சியாக போபாலில் உள்ள லால்பரேட் மைதானத்தில் திங்கட்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் தருவது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் ராஜஸ்தானில் மூத்த தலைவர் அசோக் கெலாட், இளம் தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் இடையே போட்டி நிலவி வருகிறது. இதனால், இந்த 2 மாநிலங்களிலும் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் ஆகியோர்களிடம் கருத்துக்களை கேட்ட பின்பு இந்த மாநிலங்களில் யார் முதல்வர் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவிக்கவுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்