SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடக்கக்கல்வி இயக்குனரகம் அதிரடி தகுதியில்லாத ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவு

2018-12-14@ 00:44:38

வேலூர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர் பட்டியலை தயாரித்து வழங்கும்படி தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் குறிப்பாக ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சரியாக வருவதில்லை என்றும், அதேபோல் நீண்ட நாள் விடுப்பு, கற்பித்தலில் திறமையின்ைம போன்ற பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அனுமதியின்றி நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கும், கற்பித்தலில் திறமையில்லாத ஆசிரியர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முன்தேதியிட்டு விடுப்பு அளித்தல், தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாக வருவது, தேதி குறிப்பிடாமல் விடுப்பு கடிதம் வழங்குதல் என ஒழுங்கீனங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது.
 உரிய தரச்சான்று பெற்ற பின்னரே அரசு வழங்கும் நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் எமிஸ் பதிவுகள் மற்றும் மாணவர் எண்ணிக்கையை அவ்வப்போது ஒப்பிட்டு கண்காணிக்க வேண்டும். மாணவர் வருகை கல்வித்துறை ஆப்ஸில் மேற்கொள்ள தயாராக இருக்க பள்ளிகளை வலியுறுத்த வேண்டும்  என்று தொடக்கக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்