SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போதையில் இருந்ததால் வார்டுக்குள் அனுமதிக்க மறுப்பு கடலூர் அரசு மருத்துவமனையில் எஸ்எஸ்ஐயை தாக்கி விட்டு நிர்வாணமாக ஓடிய வாலிபர்

2018-12-14@ 00:43:48

கடலூர்:  கடலூர் அரசு மருத்துவமனையில் போதையில், சிறப்பு எஸ்ஐயை  தாக்கி  ரகளையில் ஈடுபட்டதோடு நிர்வாணமாக சாலையில் ஓடிய வாலிபரை போலீசார்  மடக்கி பிடித்து கைது செய்தனர். கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம்  அருகே புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ்(27).  இவரது மனைவி  கீர்த்தனாவுக்கு (24) கடலூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று காலை  பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  10.30  மணிக்கு போதையில் தள்ளாடியபடி மகப்பேறு மருத்துவமனைக்கு  வந்த  புஷ்பராஜ், அங்கிருந்த செக்யூரிட்டி திருமுருகனிடம்  உடனே மனைவியையும் குழந்தையையும் பார்க்க வேண்டும். கதவைத் திற என்று மிரட்டியுள்ளார்.

இரவு நேரத்தில், போதையில் உள்ளே அனுமதிக்க  முடியாது என்று அவர் மறுத்ததால் ஆவேசம் அடைந்த புஷ்பராஜ் ரகளையில் ஈடுபட்டு  திருமுருகனை அசிங்கமாக திட்டி தாக்கினார். இதனால் மகப்பேறு மருத்துவமனை  வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  தகவல் அறிந்த மருத்துவமனை  புறக்காவல் நிலைய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரி வந்து புஷ்பராஜை கண்டித்தார். ஆனால் அதற்கும் அடங்காமல் அவரையும் தாக்கிவிட்டு ஓடினார். அவரை பிடிக்க சிறப்பு எஸ்ஐ பக்கிரியும் ஓடினார். அப்போது புஷ்பராஜ் லுங்கி அவிழ்ந்தது. இதனால் நிர்வாணமாக சாலையில் ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்