SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி சேலைகள் அனுப்பும் பணி தொடங்கியது

2018-12-14@ 00:41:40

ஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக உற்பத்தி செய்யப்பட்ட இலவச வேட்டி-சேலைகளை  தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.  பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சார்பில் ஏழை எளியோர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு  வருகின்றது. இந்தாண்டு இலவச பொங்கல் வேட்டி-சேலை திட்டத்திற்காக தமிழக அரசு  486 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  ஈரோடு, திருப்பூர், கோவை,  விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நெசவாளர்  கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இலவச வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. மொத்த உற்பத்தியில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40  சதவீதமாகும். மாவட்டத்தில் 48  விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 57 லட்சத்து 70 ஆயிரம் வேட்டிகள்,  சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

 இதில் 75% வேட்டி-சேலைகள்  உற்பத்தி செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல்  பண்டிகைக்கு முன்பாக பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கி முடிக்க  வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து இவற்றை கோஆப்டெக்ஸ் மூலமாக அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு  அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், `ஈரோடு மாவட்டத்திற்கு  உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 57 லட்சத்து 70 ஆயிரம் வேட்டி  சேலையில் 75 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது.  

மீதமுள்ள 25 சதவீதம் ஜனவரி 10க்குள்  முடிக்கப்படும். உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் தரம் பார்க்கப்பட்டு  கோஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து பேக்கிங்  செய்யப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அங்கிருந்து பிரித்து ரேஷன் கடை வாரியாக  அனுப்பி வைக்கப்படும்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்