SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விசைப்படகு திடீரென பழுதானதால் 3 நாட்களாக ஆழ்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள்

2018-12-14@ 00:17:48

நித்திரவிளை: விசைப்படகு திடீரென பழுதானதால் 3 நாட்களாக ஆழ்கடலில் குமரி மீனவர்கள் தத்தளித்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளையை சேர்ந்தவர் லாசர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 5ம் தேதி ரிச்சர்ட் (41), வியாகுல அடிமை(42), சர்ஜின் (25), ஸ்டீபன் (56), ஜோபின்(20), டோவின் (29) மற்றும் கேரளா, அசாம்  பகுதியை சேர்ந்த மொத்தம் 14 பேர் சென்றனர்.  இவர்கள் சென்ற விசைப்படகு 4 நாட்கள் கழித்து மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினபுரி கடல் பகுதியில் பழுதாகி நின்றது. இது சம்பந்தமான தகவல்களை படகில் இருந்தவர்கள் அங்குள்ள கடலோர காவல்படை, மற்றும் இந்திய கடல்படைக்கும் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்களை மட்டும் கரையில் கொண்டு செல்லலாம், படகை கரை இழுத்து செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜோஸ் பில்பினிடம் புகார் கூறியுள்ளனர்.

இதுசம்பந்தமாக ஜோஸ்பில்பின் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார் . மீன்வளத்துறை அதிகாரிகள் மத்திய அரசின் மீன் வளத்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த மீனவர்கள் ரத்தினபுரியில் உள்ள ஒரு தனியார் விசைப்படகை 60 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை பிடித்தனர்.  அதில் பழுதான படகை கட்டி, மீனவர்கள் நேற்று அதிகாலை ரத்தினபுரி துறைமுகத்தில் கரை சேர்ந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்