SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்துப்பேட்டை அருகே தீ மூட்டி வெளிச்சம் ஏற்படுத்தி மின் கம்பம் சீரமைக்கும் பணி: ஊழியர்களை பாராட்டும் மக்கள்

2018-12-13@ 21:27:36

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அனைத்து மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தது. இதனால் 27 நாட்கள் கடந்தும் 900க்கும் மேற்பட்ட மின் பணியாளார்கள் இரவு, பகல் பாராமல்  சீரமைப்பு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் இன்னும் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுமையடையாமல் உள்ளதால் மக்கள் மின்சாரமில்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில்  நேற்று முன்தினம் இரவு நடந்த பணியின்போது வெளிச்சத்துக்கு அருகில் கிடந்த விறகுகளை கொண்டு தீயை மூட்டி அதில் ஏற்படும் வெளிச்சத்தை கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி மக்கள் தங்களது பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்