SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நடத்திய வருமானவரித்துறை விசாரணை நிறைவு: சொத்துக்கள் குறித்து சரமாரி கேள்வி

2018-12-13@ 19:53:26

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரமாக நடத்தி வந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. சென்னையில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீடு, அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அக்கா மகன் டிடிவி தினகரன், சகோதரர் மகன் விவேக், அவரது உறவினர்கள், பினாமிகளுக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு சோதனை நடத்தினர். அதில் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவது, 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்துள்ளது உள்பட ரூ.3000 கோடிக்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இப்புகார் தொடர்பாக சசிகலாவின் ரத்த சம்மந்தமான உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்பட பலரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் பினாமிகளின் சொத்துக்களை வருமான வரித்துறை அதிகரிகள்  முடக்கி வைத்தனர். இது குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில், சிறையில் உள்ள சசிகலாவிடம் மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தாமல் இருந்தனர்.  சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்ககோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு ஐடி அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதை பரிசீலனை செய்த சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை  நடத்த அனுமதி வழங்கினர். அதை தொடர்ந்து டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த முடிவு செய்த அதிகாரிகள் இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.

ஐடி அதிகாரி வீரராகவராவ் தலைமையில் ஒரு பெண் உள்பட 5 அதிகாரிகள் சிறையில் சசிகலாவிடம் விசாரணை தொடங்கினர். இன்று மாலை வரை தொடர்ந்து 8 மணிநேரமாக நடந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. சொத்து குவிப்பு தொடர்பாக, 500க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பதில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறவினர்கள், பினாமிகள் சொத்து குவிப்பு தொடர்பாக சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த விசாரைணயைப் பொறுத்தே, சசிகலா மீது புதிய வழக்குப் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்