SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூரில் 65 யானைகள் முகாம்:சூளகிரியில் யானை தாக்கி விவசாயி பலி

2018-12-12@ 18:38:29

ஓசூர்: ஓசூரில் 65 யானைகள் முகாமிட்டுள்ளன. சூளகிரியில் ஒற்றை யானை தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது சடலத்தை எடுக்க விடாமல் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்ேகாட்டையையொட்டிய வனப்பகுதியில் யானைகள் முகாமிடுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அண்மையில், 100க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனத்துக்கு விரட்டப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் ஒற்றை யானை உள்பட 7 யானைகள் போடூர் பகுதியில் முகாமிட்டிருந்தன. இந்நிலையில், தற்போது ஓசூர் வனப்பகுதிக்கு 25க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. நேற்று சினிகிரிப்பள்ளி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வந்த இந்த யானைகள் சான மாவு புளியந்தோப்பு பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு மேலும் யானைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த யானைகள் பல பிரிவுகளாக சுற்றி திரிந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. போடூரில் 17 யானைகளும், பேரண்டப்பள்ளியில் 7 யானைகளும், சானமாவில் 25 யானைகளும் சினிகிரிப்பள்ளியில் 25 யானைகளும் என 65க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகியை அறுவடை செய்வது வழக்கம். இந்த யானை கூட்டத்தில் பல குட்டி யானைகள் உள்ளது. ராகி அதிகளவு சத்து நிறைந்ததால், குட்டிகளுக்கு பால் கொடுப்பதற்காக யானைகள் அதிகளவில் ராகியை சாப்பிடுவதற்காக நவம்பர், டிசம்பர் மாதங்களில் வருவது வழக்கம். இதேபோல் தற்போது 65க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன என்றனர்.

 யானைகள் முகாமிட்டிருப்பதால் வனப்பகுதியையொட்டிய கிராம விவசாயிகள் கடும் பீதியில் உள்ளனர். இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.யானை தாக்கி விவசாயி பலி: சூளகிரியில் 5க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் உத்தனபள்ளி, தியானதுர்கம், நாயக்கன்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகிறது. தியானதுர்கம் கிராமத்தை சேர்ந்தவர் சென்னபர்சப்பா (55), விவசாயி. இவர் நேற்றிரவு தனது விவசாய நிலத்தில் காவலில் இருந்தார். பின்னர் இன்று அதிகாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தியானதுர்கம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த ஒற்றை யானை சென்னபர்சப்பாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த சென்னபர்சப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உத்தனப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாத் மற்றும் போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள், உறவினர்கள் சென்னபர்சப்பாவின் சடலத்தை எடுத்து செல்ல கூடாது என அதிகாரிகள், போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, யானையை விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மக்களுக்கு பேட்டரியுடன் கூடிய டார்ச்லைட், யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் வெடி மற்றும் உயிரிழப்பவர்களுக்கு உரிய இழப்பீடுகளை கொடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-03-2019

  21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்