SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஒன்றரை மணிநேரத்தில் கொண்டு வரப்பட்ட இருதயம்

2018-12-12@ 17:53:19

புதுச்சேரி: புதுச்சேரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அடையார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளி ஒருவருக்காக அவசர அவசரமாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பாண்டிச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடைந்துள்ளார். அவருடையா உடல் உறுப்பானது குறிப்பாக இருதயமானது பாண்டிச்சேரியில் இருந்து சரியாக 3.29 மணிக்கு சென்னையில் இருக்கக்கூடிய அடையார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. புதுவையில் இருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் இருதயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் மூலம் இருதயத்தை கொண்டுவர போக்குவரத்தை சரி செய்து போலீசார் சிறப்பு ஏற்பாடு செய்து தந்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் மலர் மருத்துவமனையில் தயாராக இருந்த மருத்துவர்கள் இதயத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த இருதயமானது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  29 வயது இளைஞர் ஒருவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்