SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளுக்கு நாள் சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

2018-12-12@ 17:51:33

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு 2,270 கன அடியாக நீர்வரத்து இருந்தது.

இன்று நீர்வரத்தானது 2,109 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 9,000 கன அடியும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 102.24 அடியாக இருந்தது. இன்று மேலும் சரிந்து தற்போது 101.75 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்