SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரி மாவட்டத்தில் காபி மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

2018-12-12@ 13:06:03

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு பகுதியில் இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஊட்டி மற்றும் குந்தா வட்டாரங்களில் மட்டும் காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. கூடலூர், பந்தலூர், ஊட்டி, குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் சில இடங்களில் காபி பயிரிடப்படுகிறது. காபியை பொருத்தவரை அறுவடை காலம் அதிகம் என்பதால் இதனை பயிரிட விவசாயிகள் தயக்கம்காட்டி வருகின்றனர். பெரும்பாபலான விவசாயிகள் தாங்கள் சொந்த உபயோகத்திற்காகவும், சிலர் விற்பனைக்காகவும் பயிரிடுகின்றனர். காபி மகசூல் அதிகரித்தால், அதிக லாபம் கிடைக்கும்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி, நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்தது. இதனால், தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி மற்றும் காபி தோட்டங்கள் பசுமையாக மாறின. இந்த மழை காரணமாக ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு, சின்னக்குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களில் மகசூல் அதிகரித்துள்ளது. சிலர் தேயிலை பயிர்களுக்கு நடுவே ஊடு பயிராக காபி பயிரிடப்பட்டுள்ள நிலையில், தேயிலை மற்றும் காபி மகசூல் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் ஊட்டி மட்டுமின்றி, நீலகிரி மாவட்டம் முழுக்க காபி விளைச்சல் இம்முறை அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ஒன்று ரூ.150 முதல் 200 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்