SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு மணிநேர விழாவுக்கு குடிசைகளை அகற்றுவதா? அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

2018-12-11@ 17:43:17

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முதலமைச்சர் வருகையையொட்டி 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் மற்றும் மரங்களை வெட்டி அகற்றப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீரகனுர் சந்தைப்பேட்டை அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 2,000 பேர் அமரும் வகையில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனையொட்டி அப்பகுதியில் உள்ள குடிசைகள், 50 ஆண்டுகள் பழமையான புளியமரங்களை வெட்டி அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இவ்வளவு ஆடம்பரமான ஏற்பாடுகள் தேவையா என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை போன்று ஆடம்பரமான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்நிலையில் குடிசைகள், மரங்களை வெட்டி முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்