SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபாச படத்தை காட்டி மிரட்டியதால் பெண் தற்கொலை போலீசார் விசாரிக்க மறுத்ததால் குடும்பமே தற்கொலை முயற்சி

2018-12-11@ 00:34:43

விழுப்புரம் : நிர்வாண படத்தை காட்டி மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரிக்க மறுத்ததால் எஸ்பி அலுவலகத்தில் கணவன் உட்பட குடும்பத்தினர்  தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன்கள் பெரியமருது, அரவிந்தன் மற்றும் உறவினர் அஞ்சலை ஆகியோர் நேற்று எஸ்பி அலுவலகம் முன் தங்கள் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் கேன், தீப்பெட்டியை பறித்து அவர்களை காப்பாற்றினர். இதுகுறித்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராமகிருஷ்ணன் கூறியதாவது: உதயாம்பட்டை சேர்ந்த லட்சுமி என்பவருடன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். வேலை தேடி வெளிநாட்டிற்கு நான் சென்றுவிட்டேன். இதனிடையே எனது மனைவி கடந்த மாதம் 7ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வரஞ்சரம் காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

விசாரித்தபோது, எனது மனைவிக்கும், உதயாம்பட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இருவரும் உல்லாசமாக இருக்கும் படத்தை காட்டி ராமச்சந்திரன் எனது மனைவியிடம் ரூ.5 லட்சம் மற்றும் 15 பவுன் நகை பறித்துள்ளார் என்ற விவரத்தை அறிந்தேன். இறப்பதற்கு முன்பு 6ம் தேதி இரவு 9 மணியளவில் லட்சுமியிடம், ராமச்சந்திரன் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால் லட்சுமியை தாக்கிவிட்டு நிர்வாண போட்டோவை இணையதளத்தில் விடப்போகிறேன் என மிரட்டியுள்ளார். இதனால்தான் என் மனைவி தற்கொலை செய்துள்ளார். இதற்கு நீதிகேட்டு வரஞ்சரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் முடிந்த வழக்கை எதற்காக கிளப்புகிறீர்கள் என்று கேட்டு அனுப்பிவிட்டனர். டிஎஸ்பி உத்தரவிட்டும் இதுவரை விசாரணை நடக்கவில்லை. தற்போது ராமச்சந்திரன் ஆயுதங்களுடன் எங்களை மிரட்டுகிறார். பாதுகாப்பு இல்லாமல் அச்சத்துடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்களை காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

 • turkeycamelfight

  2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்