SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலை வழக்கில் ஒரே குடும்பத்தினர் 7 பேருக்கு ஆயுள்

2018-12-11@ 00:33:13

தேனி: தேனி அருகே வீரபாண்டி லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரி (55). தேனி ஒன்றிய அதிமுக முன்னாள் கவுன்சிலர். இதே தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (60). இவர் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ரமேஷ்குமார் (35). இவர் போலீசாக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். கோடீஸ்வரனும், மந்திரியும் உறவினர்கள்.  கடந்த 2015ல், ரமேஷ்குமார் கத்தியால் குத்தியதில் மந்திரி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷ்குமார், அவரது தந்தை கோடீஸ்வரன், தாய் தெய்வம், உறவினர்கள் செல்வம், செல்வராணி, கோபிக்கண்ணன், சந்திரா ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தேனி கூடுதல் அமர்வு நீதிமன்றம் 7 பேருக்கும் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்