SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மேகதாது அணை பணிகளை கைவிட வேண்டும் : கர்நாடக அமைச்சருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் கடிதம்

2018-12-10@ 15:23:36

சென்னை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் சிவகுமார் தமிழக முதலமைச்சரை சந்திக்க முயல்வது நீதிமன்ற விசாரணையை தாமதப்படுத்தும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னதாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமாருக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் அனுப்பினார். காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.மேலும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பான பிளாஷ்பேக்

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகதாது அணை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரம் கேட்டு கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதி இருந்தார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கடிதம்

இதற்கு கடிதம் மூலம் பதில் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், கர்நாடக அரசின் கோரிக்கையானது உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை தாமதப்படுத்தும் முயற்சி என்று தெரிவித்தார். மேலும் கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திடமும் முன் அனுமதி பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனவே மேகதாது அணை தொடர்பாக எந்த திட்ட அறிக்கையும் தயாரிக்க வேண்டாம் எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்