SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயலில் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் அகற்றாததால் மரங்களுக்கு தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள்

2018-12-10@ 15:22:12

தஞ்சை: கஜா புயலில் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் அகற்றாததால் விவசாயிகளே அதனை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புயல் தாக்கி 26 நாட்கள் ஆகியும் மரங்கள் அகற்றப்படாததால் நோய் பரவும் சூழல் நிலவுகிறது. மரங்கள் அகற்றப்படாததால் புதிய மர கன்றுகளை நடப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசயிகள் கூறியுள்ளனர். புயல் தாக்கி 26 நாட்கள் ஆகியும் தங்கள் நிலத்தில் உள்ள தென்னை மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் நிலையில் விவசாயமும் அழிந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புயல் பாதிக்கப்பட்டு 26 நாட்கள் ஆகியும் சாய்ந்த மரங்களை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து புயலால் சாய்ந்த மரங்களை விவசாயிகளே அவர்கள் நிலத்தில் தீயிட்டு எரித்து வருகின்றனர்.

ஒரத்தநாடு அருகே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மரங்களை அகற்றுவதற்கு அரசு அறிவித்திருக்கும் இயந்திரங்கள் தங்களுக்கு போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. மரங்களை அகற்றப்படமுடியாததால் இலவசமாக எடுத்து செல்ல அறிவிக்கப்பட்டிருந்தும் யாரும் எடுத்து செல்ல முன் வரவில்லை என கூறியுள்ளனர். இதனால் தாங்களே மரங்களை தீயிட்டு கொளுத்துவதாக தெரிவித்துள்ளனர். சாய்ந்த மரங்களை அகற்றவும், வெட்டவும் பணம் இல்லாததால் தாங்கள் இவ்வாறு செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். தொடர்ச்சியாக கக்கரை கிராமம் மட்டும் இன்றி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் லட்ச கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாக தெரியவந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்