SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பள்ளிகளில் படித்த 7 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது: தகவலறியும் உரிமைச் சட்டம்

2018-12-10@ 15:14:04

சென்னை: நடப்பாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 7 மாணவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்கும், தனியார் பள்ளிகளில் பயின்ற 20 மாணவர்களுக்கும்,சி.பி.எஸ்.இ மாணவர்கள் 611 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக நகரங்களின் இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப்படிப்பை முடித்த 191 பேருக்கும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு பள்ளியை சேர்ந்த 1 மாணவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

அதேபோல தனியார் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்களை 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக இருப்பிட சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளி படிப்பை முடித்த 70 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வை எழுதிய 1,277 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 557 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அரசு கூறிவந்த நிலையில், தற்போது வெறும் 7 பேர் மட்டுமே சேர்ந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்