SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்கொரிய பயணிகள் இந்தியா வந்த பிறகு விசா பெறும் வசதி : மத்திய அரசு அனுமதி

2018-12-10@ 15:00:33

புதுடெல்லி : தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியா வந்த பிறகு விசா பெற்றுக் கொள்ளும் வசதியை மத்திய அரசு அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தகவலில் ஒரு நாளில் டெல்லிக்கு வருபவர்களில் 800 பேர் தென்கொரியாவை சேர்ந்தவர்கள், அதேபோல ஓர் ஆண்டில் 2 லட்சம் விசாக்கள் தென்கொரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் 80 சதவிகிதம் பேர் சுற்றுலாவுக்காக இந்தியா வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பாஸ்போட்டைக் கொண்டு இந்தியா வந்த பிறகு விசா பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, தென்கொரியர்கள் இந்தியா வந்த பிறகு டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 6 விமான நிலையங்களில் விசாக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வர்த்தகம், சுற்றுலா, சிகிச்சை போன்ற காரணங்களுக்காக 60 நாள்கள் விசா வழங்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவுக்கு வரும் தென்கொரிய தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இதே வசதி ஜப்பான் நாட்டுப் பயணிகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு மார்ச் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2வது நாடாக தென்கொரியாவுக்கும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர 166 நாடுகளுக்கு இணையவழி சுற்றுலா விசாவை இந்தியா வழங்கி வருகிறது. தற்போது வழங்கி வரும் விசாவில் 40 சதவீதம் இணைய வழியில் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்