SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் அருகே ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்

2018-12-10@ 14:51:12

சேலம்: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறி வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் செல்போன் எண்ணைப் பதிவிட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சேலத்தில் கடத்தப்பட்டார். புயலால் பாதிக்கப்பட்டு உதவி கோருவது போல் அழைத்து, கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வாழப்பாடியில் உள்ள வைகை மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை அன்று காரில் கடத்திச் செல்லப்பட்டார். மணிகண்டனை விடுவிக்க வேண்டுமானால் 10 லட்சம் கொண்டு வருமாறு அவரது தந்தைக்கு கடத்தல் கும்பல் செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து சேலம் போலீசாரிடம் புகார் அளிக்கப்படவே செல்போன் எண்ணை வைத்து இருப்பிடம் கண்டறியப்பட்டது. தஞ்சாவூர் அருகே கடத்தல் கும்பல் இருப்பதை அறிந்த போலீசார் பணம் கொண்டு வருவதாக மணிகண்டனின் தந்தையை பேச வைத்துள்ளனர்.

சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் அருகே கடத்தல் கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது இருவர் தப்பி ஓடிவிட இருவர் சிக்கிக் கொண்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை மீட்டனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவன் பேராவூரணியை சேர்ந்த மகேஷ் என்றும் மற்றொருவன் மதுரை அருகே உள்ள தேனியைச் சேர்ந்தவன் எனவும் போலீசார் தெரிவித்தனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக செல்போன் எண்ணை வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் மணிகண்டன் பதிவிட்டதை பார்த்த அந்த கும்பல் அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை மணிகண்டனை அணுகிய கடத்தல் கும்பல் உதவி செய்யுமாறு கோரி உள்ளது. இதைக் கேட்டு மனமிறங்கிய மணிகண்டன் உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது அவரை காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றுள்ளனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்