SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்... வானிலை மைய இயக்குநர் தகவல்

2018-12-10@ 14:41:45

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளது. அதனை அடுத்து வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

பின்னர் அவர் கூறுகையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தெற்கு மத்திய வங்க கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்காது என்றும், சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே காணப்படும் என  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்