SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்டல் மண் எடுக்கும் விவகாரம்: அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

2018-12-10@ 14:40:40

சென்னை: நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் விவகாரத்தில் வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க யாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை அறிக்கயைாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்காக கூடுதல் அவகாசம் கோரிய தமிழக அரசை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மணலை எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை மீறி செங்கற்சூளைகளுக்கு சட்ட விரோதமாக அதிகளவில் வண்டல் மண் அள்ளப்படுவதாக திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனுமதிக்கப்பட்ட ஒரு மீட்டர் அளவை தாண்டி சட்ட விரோதமாக வண்டல் மண் எடுக்கப்படுவதால் இயற்கை வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மேட்டூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கபடும் என அரசுக்கு உயர்நீதிமன்ற எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்