SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலாஜி குழுமத்தில் 4 நாட்களாக நடந்து வந்த வருமான வரி சோதனை நிறைவு : கணக்கில் வராத ரூ.110 கோடி பணம், ஆவணங்கள் சிக்கின

2018-12-10@ 14:34:34

சென்னை : பாலாஜி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 110 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து 4 நாட்கள் சோதனை நிறைவடைந்தது. சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் ஆந்திர முன்னாள் எம்பி ஸ்ரீனிவாசலு ரெட்டிக்கு சொந்தமான பாலாஜி குழுமத்தில் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை , காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் 4 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீனிவாசலு வீடு, அலுவலகம் , பூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலை ஆகிய 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இன்று காலை வரை 4வது நாளாக சோதனை நீடித்தது.

இதில் சுமார் ரூ.110 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை நிறைவடைந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை அக்குழுமம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அவற்றை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசியல் பயன்பாட்டிற்காகவா அல்லது லஞ்சம் கொடுக்க இவ்வளவு பெரிய தொகை திரட்டப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்