SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது குறித்து தொல்லியல் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு

2018-12-10@ 14:33:02

மதுரை : தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 7ம் தேதி ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலின் பழமையை காக்கும் வகையில் தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிய வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அவசர வழக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பி நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் தியான நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகையை அகற்ற வேண்டும் என்றும், தஞ்சை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கொட்டகை அகற்றப்பட்டதை உறுதி செய்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி கோயிலில் நகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு தனியார் மண்டபத்துக்கு மாற்றப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

அப்போது பாரம்பரியமிக்க தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது, அனுமதி வழங்கியது யார் என்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு கேள்வி எழுப்பினர். மேலும் எந்த விதிமுறையின்கீழ் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்றும், தற்காலிக கொட்டகை போட்டதில் கோயிலில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய தொல்லியல் துறையின் உதவி பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். வரும் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்